Wednesday, July 30, 2025

”பெரிய தப்பு பண்ணிட்டீங்க” தேர்வுக்குழுவை விளாசிய கங்குலி

இந்திய முன்னாள் கேப்டனும், BCCI தலைவருமான சவுரவ் கங்குலி, இந்திய தேர்வுக்குழுவை சரமாரியாக விளாசி பேட்டி அளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில், நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு கொடுக்காதது தான், அவரின் கோபத்திற்கு காரணம்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில், ” கடந்த ஒரு வருடமாக ஷ்ரேயாஸ் நல்ல பார்மில் இருக்கிறார். நிச்சயம் அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சேர்த்திருக்க வேண்டும். அழுத்தங்கள் நிறைந்த நேரத்திலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பொறுப்பை உணர்ந்து, நேரத்திற்கு தகுந்தாற்போல ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

மிகப்பெரும் பலவீனமாக இருந்த Short Ball பிரச்சினையையும், தற்போது சரிசெய்து விட்டார். நான் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால், நிச்சயம் ஷ்ரேயாஸை அணியில் சேர்த்திருப்பேன். தேர்வுக்குழுவினர் பெரிய தவறை செய்துவிட்டார்கள். மிடில் வரிசையில், அவரால் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க முடியும்,” என்று கொந்தளித்து இருக்கிறார்.

IPL தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்களும் கூட இந்த விஷயத்தில் ஷ்ரேயாஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் BCCI யாருடைய கருத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News