சரக்கு கப்பலில் இரண்டாவது நாளாக எரியும் தீ

சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று கேரள மாநிலத்தின் கண்ணூர் துறைமுகம் அருகே வந்தபோது திடீரென தீ பற்றியது. கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில், 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பலில் எளிதில் பற்றி எரியக்கூடிய திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் தீப்பற்றி 24 மணிநேரத்தை கடந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் கடலோரப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News

Latest News