Monday, June 9, 2025

கேஎல் ராகுல் ‘அதுக்கு’ சரிப்பட மாட்டாரு ‘தமிழக’ வீரருக்கு பாண்டிங் ஆதரவு

Rohit Sharma, Virat Kohli, Ravichandran Ashwin ஆகிய மூவரின் இடங்களையும் நிரப்பக்கூடிய திறமையான வீரர்கள், இந்திய அணியில் இருக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான Ricky Ponting தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து, ICC Reviewவில் Ricky Ponting பேசியிருக்கிறார். அதில் இந்திய டெஸ்ட் அணி குறித்து, ” Bumrah, Rahul போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இருந்தாலும், கேப்டனாக Subhman Gillஐ தேர்வு செய்திருப்பது சரியான விஷயம்.

IPL தொடரில் Gill சிறப்பாக கேப்டன்சி செய்திருந்தார். ஓபனராக Yashasvi Jaiswal உடன் இணைந்து Sai Sudarsan இறங்குவது சிறப்பாக இருக்கும். IPLல் அவரது பேட்டிங்கை பார்த்தேன். மிகச்சிறப்பாக இருந்தது. டெஸ்டிற்கு ஏற்ற டெக்னிக் அவரிடம் இருக்கிறது. இதனால், டெஸ்டில் இவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

3வது இடத்தில் Karun Nair அல்லது KL Rahul இறங்கலாம். Gillலுக்கு 4வது இடம் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த இடத்தில் அழுத்தமின்றி அவரால் சிறப்பாக செயல்பட முடியும். இதேபோல பந்துவீச்சில் Arshdeep Singh இந்தியாவிற்கு நல்ல Choice ஆக இருப்பார். அவருக்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருக்கிறது,” என்று பேசி இருக்கிறார்.

IPL தொடரில் அபாரமாக செயல்பட்ட Shreyasக்கு பதிலாக, இளம்வீரர் Sudarsanக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது, மிகப்பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. நிலைமை இப்படியிருக்க கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான Ricky Ponting, டெஸ்ட் தொடருக்கு Sai Sudarsan நல்ல தேர்வு என்று தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் Sai Sudarsanக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news