குடோனில் உணவுப்பொருட்களை திருடிய வடமாநில இளைஞர்கள் – போலீசார் வழக்குப்பதிவு

சேலம் அழகாபுரம் சம்பந்தர் தெருவை சேர்ந்த சிவபாலன் என்பவர், உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையின் குடோன் சாமிநாதபுரம் தம்மன்னன் தெருவில் உள்ளது. இந்த குடோனின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டு பண்டல்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்டையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வடமாநில இளைஞர்கள் இருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related News

Latest News