மனைவியின் தலையை வெட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்த கணவன்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சங்கர் மற்றும் மானசா தம்பதிகள் வாடை வீட்டில் வசித்து வந்தனர். ஜூன் 3 ம் தேதி வேலைக்கு சென்ற சங்கர் வீடு திரும்பிய போது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மானசா வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் தொடர்ந்து வீட்டிற்கு வந்து சங்கருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு, மானசா மீண்டும் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சங்கர், மனசாவை தலை வெட்டி கொலை செய்தார்.

வெட்டப்பட்ட மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு சூர்யநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர் சங்கரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News