டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், மது போதையில் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related News

Latest News