Sunday, June 8, 2025

”எதிரிக்கு எதிரி நண்பன்” சீனா பறக்கும் Trump : நாங்க ‘அழைக்கல’ Thug Reply

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை, டொனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார். குறிப்பாக சீனாவுக்கு எதிராக ஓவர்டைம் வேலை செய்து, ஏகப்பட்ட வரிகளை விதித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்கா மீது வரிகளை விதித்து திருப்பி அடித்தது.

இரண்டு நாடுகளின் வரி விளையாட்டால், உலகளாவிய பங்குச்சந்தை வெகுவாக பாதிக்கப்பட்டது. மே மாதம் நடந்த சமாதான பேச்சுக்கு பிறகு, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. என்றாலும் இந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, இரண்டு நாடுகளும் மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளவும் தவறவில்லை.

நிலைமை இப்படியிருக்க அண்மையில் சீன அதிபர் ஜின் பிங்குடன், டிரம்ப் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப்போர் மற்றும், கனிமவள ஒப்பந்தம் ஆகியவை குறித்து இந்த உரையாடல் நீண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சீனாவுக்கு செல்லவிருப்பதாக, டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்  அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” இருவருக்கும் இடையில் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடல் நீண்டது. என்னையும், அமெரிக்காவின் முதல் பெண்மணியையும் ஜி ஜின்பிங் சீனாவிற்கு அழைத்துள்ளார்.

உலகின் இரண்டு பெரிய நாடுகளின் அதிபர்களால், வரும் காலத்தில் நன்மைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ” என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்து சீனா, ” டிரம்ப் தான் தொலைபேசி அழைப்புக்கு கோரிக்கை விடுத்தார் ,” என்று Thug Reply அளித்துள்ளது.

ஜூன் 9ம் தேதி அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகள் லண்டனில் சந்தித்து, இருநாட்டு வர்த்தகம் குறித்து பேசவுள்ளனர். இதை ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news