Friday, August 15, 2025
HTML tutorial

நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த போது தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

கமல்ஹாசன் சொத்து விபரம்

கமல்ஹாசன் சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, 2023-24 நிதியாண்டிற்கான அவரது வருமானம் ₹78.90 கோடியாக இருந்தது.

அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு ₹59.69 கோடி மற்றும் அவரது அசையா சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு ₹245.86 கோடி ஆகும். சொத்துக்கள் தவிர, அவர் ₹49.67 கோடி கடன்களையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா பொலேரோ, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் லெக்ஸஸ் ஆகிய நான்கு சொகுசு வாகனங்களை சொந்தமாக வைத்துள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ₹8.43 கோடி என்றும் பிரமாணப் பத்திரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கையில் உள்ள ரொக்கப் பணம் ₹2.60 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News