பெங்களூரு கூட்ட நெரிசல் : உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த RCB அணி நிர்வாகம்

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிகொண்டாடத்தில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். ஒரு கட்டத்தில் நுழைவு வாயில்களை உடைத்துக்கொண்டும், தாண்டி குதித்தும் ரசிகர்கள் விளையாட்டு அரங்குக்குள் நுழைய முயன்ற போதுதான் அந்த சம்பவம் நடந்தது. இதில் இதில் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related News

Latest News