கொரோனா பரவல் எதிரொலி : மதுரை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா பரவல் எதிரொலியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பெரியவர்களுக்கு 30 படுக்கைகள், சிறியவர்களுக்கு 20 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் முக கவசம் அணிந்து வந்தால் நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News