பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து அரசியல் செய்யவேண்டாம் – BCCI துணை தலைவர் வேண்டுகோள்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூட்டம் கூடியது. இந்த கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் : அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது. அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது என கூறியுள்ளார்.

Related News

Latest News