ஒரு மாதமாக வீணாக வெளியேறும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், உடையார்பாளையம் பேரூராட்சிக்கு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக ஏராளமான பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கூட்டுக் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த பல மாதங்களாக ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News