அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் திருட்டு – ஒடிசா இளைஞர் கைது

சேலம் அருகே உள்ள ராக்கிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இயங்கி வரும் சத்துணவு மையத்திற்கு இன்று காலை சத்துணவு அமைப்பாளர் ராதா வந்துள்ளார். அப்போது சத்துணவு மையம் ஏற்கனவே திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, முட்டை, பருப்பு, அரிசி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டுப் போய் இருந்தது. இதையடுத்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் சத்துணவு மையத்தில் திருடிய பொருட்களை தூக்கிக்கொண்டு செல்வதை அறிந்த பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர் பின்னர் பொதுமக்கள் அடிக்கவும் செய்தனர்.

அதற்குள் அங்கு போலீசார் விரைந்து வந்து, அவனை விசாரித்த போது அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் சிக்காந்த் வயது 30 எனவும் தெரியவந்தது

320 முட்டை, 50 கிலோ அரிசி, 10 கிலோ சுண்டல் பருப்பு, கடப்பாரை, பாத்திரங்கள், போலீஸ் தொப்பி ஒன்று, பீர் பாட்டில்கள் இரண்டு ஆகியவற்றை ஆட்டையாம்பட்டி போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News