பிரதமா் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சா்களிடம் விரிவாக விவரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுடனான சண்டையில் போா் விமானங்களை இந்தியா இழந்தது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News