Thursday, January 15, 2026

களத்திலேயே ‘வெடித்த’ Cold War Princeஐ ‘வெளுக்கும்’ ரசிகர்கள்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Eliminator போட்டியில் குஜராத்தை வீழ்த்தி, மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை 228 ரன்களைக் குவிக்க, இலக்கை நோக்கித் துரத்திய குஜராத்துக்கு, பும்ரா மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார்.

இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியைத் தழுவி, IPL தொடரில் இருந்து வெளியேறியது. கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் என்று 3 வீரர்களை வைத்தே குஜராத் Play Off சுற்றுவரை முன்னேறியது. ஆனால் பும்ராவின் பந்துவீச்சு அவர்களின் கோப்பை கனவினைத் தகர்த்தெறிந்து விட்டது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லிற்கும் களத்திலேயே முட்டிக்கொண்டு விட்டது. Tossஐ வென்ற ஹர்திக் கைகொடுக்க முன்வர, கில் அவருக்கு கைகொடுக்காமல் நகர்ந்து விட்டார்.

இதனால் கடுப்பான ஹர்திக், கில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறும்போது அவரை வெறுப்பேற்றும் விதமாகக் கைகொட்டி ஆர்ப்பரித்தார். போட்டி முடியும்வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் இருந்தனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” சின்ன வயசுலேயே கேப்டன் பதவியை தூக்கிக் கொடுத்தா இப்படித்தான். திமிரு தலைக்கு ஏறிடும்,” என்று சுப்மன் கில்லைக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Related News

Latest News