10ம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்ட சக மாணவன்

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவன் தீக்ஷித் என்ற 15 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கும் தன்னுடன் படிக்கும் சக மாணவனுக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீக்ஷித்துடன் படித்த அந்த மாணவன், ராணுவ வீரரான தனது தாத்தாவின் துப்பாக்கியால் தீக்ஷித்தை சுட்டான். இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் தீக்ஷித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீக்ஷித்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சக மாணவனை தேடி வருகின்றனர்.

Related News

Latest News