Thursday, January 15, 2026

IPL கோப்பை ‘இவங்களுக்கு’ தான் ‘அடித்து’ சொல்லும் ஷேன் வாட்சன்

கடந்த 3 மாதங்களாக கன்னித்தீவு போல, நீண்டுகொண்டே சென்ற IPL போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. Qualifier 1 போட்டியில் ரஜத் படிதாரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வென்று பைனலுக்கு முன்னேறியுள்ளது.

என்றாலும் ஷ்ரேயாஸ் அய்யரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, இன்னுமொரு வாய்ப்பு மிச்சமுள்ளது. எனவே இந்த இறுதிப்போட்டி மேலும் சுவாரசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்தநிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் Shane Watson, 18வது IPL கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ” IPL 18ஆவது சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் கோப்பை வெல்லும் எனக் கருதுகிறேன். பைனலில், விராட் கோலிதான் ஆட்ட நாயகனாக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். இது RCBக்கான வருடம். Josh Hazelwoodட்டும் அணிக்குத் திரும்பிவிட்டார். RCBயின் காத்திருப்பு முடிவுக்கு வரும். கோப்பையை ஏந்துவார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News