Thursday, January 15, 2026

”உண்மையிலேயே தில்லு இருந்தா” Dhoni, Kohliய தடை பண்ணுங்க

அதிரடி ஆட்டக்காரரான இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், மனதில் பட்ட கருத்துக்களை ஒளிவு, மறைவின்றி பேசுபவர். அந்தவகையில் அண்மையில் அளித்த பேட்டியில், வீரர்களுக்கு இடையே BCCI பாரபட்சம் காட்டுவதை கண்டித்துப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர், ” திக்வேஷ் ரதி ஒரு இளம் பவுலர். அவருக்கு இதுதான் முதல் IPL தொடர். அவரின் கொண்டாட்டங்கள் சர்ச்சையை ஏற்படுகிறது என்றால், BCCI அவரைத் தனியே அழைத்து பேசியிருக்க வேண்டும்.

ஆனால் ஒரு போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி பார்த்தால் கோலியை எத்தனை போட்டிகளில் தடை செய்திருக்க வேண்டும்? ஏன் தோனி கூட ஒருமுறை களத்திற்கு வந்து, நேரடியாக நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

நியாயமாகப் பார்த்தால் திக்வேஷ் ரதி போல தோனி, கோலியையும் BCCI தடை செய்திருக்க வேண்டும். BCCI இதில் பாரபட்சம் பார்க்கிறது. இளம்வீரர்கள் என்றால் அவ்வளவு மட்டமா? எல்லோருக்கும் ஒரே மாதிரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை BCCI உறுதி செய்ய வேண்டும்,” என்று கொந்தளித்து இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ” நீங்க பேசுறது நியாயம் தான். ஆனா தோனி, கோலியை தடை பண்ணிட்டு IPL நடத்த, BCCIக்கு தைரியம் இல்லையே” என்று, சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Related News

Latest News