Thursday, January 15, 2026

குட்டி பையன் வைபவ் ‘சூரியவன்ஷிக்கு’ BCCI கொடுக்கும் ‘சம்பளத்தை’ பாருங்க

IPL தொடரில் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூரியவன்ஷி இருவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் CSKவிற்காக ஆடிய ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியும், RRக்கு விளையாடிய சூரியவன்ஷிக்கு வீரராகவும் இடம் கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் இந்திய Under 19ன் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள், 2 இருநாட்கள் போட்டி மற்றும், 50 ஓவர் பயிற்சி போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் 14 வயது குட்டி பையனான சூரியவன்ஷிக்கு, இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்காக BCCI கொடுக்கவிருக்கும் சம்பள விவரங்கள் தெரிய வந்துள்ளன.

அதன்படி ஆடும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றால் 20 ஆயிரம் ரூபாயும், பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாயும் அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும். IPL தொடரில் ஒரு போட்டிக்கு சூரியவன்ஷியின் சம்பளம், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News