Saturday, August 2, 2025
HTML tutorial

வரி மட்டும் ‘இத்தனை’ கோடியா? முன்னணி வீரர்களுக்கு ‘செக்’

ஒவ்வொரு ஆண்டும் IPL தொடரில் விளையாடும் வீரர்களின் சம்பளம், தங்கம் விலை போல தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டு மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமை லக்னோ, பஞ்சாப் அணிகளின் கேப்டன்களுக்கு கிடைத்தது.

ரிஷப் பண்டுக்கு லக்னோ 27 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்தது. ஷ்ரேயாஸை பஞ்சாப் கிங்ஸ் ரூபாய் 26 கோடியே 75 லட்சத்துக்கு எடுத்தது. என்றாலும் மொத்த ஏலத்தொகையும் வீரர்களுக்கு கிடைக்காது. அரசுக்கு வரியாக 30 சதவீதம் செலுத்த வேண்டும் என்பதால், மீதமுள்ள தொகை தான் அவர்களுக்கு எஞ்சும்.

அதன்படி ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையில், வீரர்களுக்கு கையில் எவ்வளவு கிடைக்கும்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ரிஷப்புக்கு ரூபாய் 18 கோடியே 90 லட்சமும், ஷ்ரேயாஸ்க்கு ரூபாய் 18 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரமும் கிடைக்கும்.

சென்னை வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பஞ்சாப் வீரர்கள் Arsdeep Singh, சாஹல் ஆகிய மூவருக்கும் இந்த IPL தொடரில் சம்பளம் 18 கோடி ரூபாய். ஆனால் வரிபிடித்தம் போக 12 கோடியே 60 லட்சம் ரூபாய் தான் இவர்களுக்குக் கிடைக்கும்.

டெல்லி அணிக்காக விளையாடி வரும் கேஎல் ராகுல், 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். வரி செலுத்தியது போக ராகுலுக்கு, 9 கோடியே 80 லட்சம் ரூபாய் மட்டுமே கையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News