Saturday, August 2, 2025
HTML tutorial

”CSKவ விட்டு வெளிய போங்க” நேரலையில் நடந்த ‘சம்பவம்’

IPL தொடரில் அதிகமுறை Play Off மற்றும், இறுதிப்போட்டிக்கு சென்ற ஒரே அணியாக சென்னை இருக்கிறது. 5 கோப்பைகளை கைவசம் வைத்திருக்கும் சென்னை, இந்தமுறை 6வது கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால் தொடர் தோல்விகளால் இந்த 2025ம் ஆண்டு தொடரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது இடத்தில் நிறைவு செய்துள்ளது. இது ரசிகர்களுக்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் தோனி தொடங்கி அனைத்து வீரர்களையும், இஷ்டத்துக்கு வசைபாடி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நேரடியாக ரசிகர் ஒருவர் தாக்கிப் பேசியுள்ளார். Youtube நேரலையின்போது அந்த ரசிகர், ” Dear அஸ்வின் தயவுசெய்து என் அன்பான, CSK குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள்,” என்றார்.

பதிலுக்கு அஸ்வின், ” உங்கள் எல்லோரையும் விட நான் எனது அணியை மிகவும் நேசிக்கிறேன். 2009 முதல் 2015ம் ஆண்டு வரை இதே அணியில் இருந்துள்ளேன். நான் இதற்கு முன்பு 7 ஆண்டுகள், CSK அணிக்காக விளையாடி நிறைய பட்டங்களையும் வென்றிருக்கிறேன்.

ஒரு சாம்பியன் அணியை இப்படி பார்க்கையில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுகிறேன். ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக உள்ளது

பவர்பிளேயில், நான் அதிக ரன்களை கொடுத்துள்ளேன். ஆனால் அடுத்த முறை பவர்பிளே ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்று பதில் அளித்துள்ளார்.

அஸ்வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அவரை 9 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு CSK ஏலத்தில் எடுத்தது. ஆனால் 9 போட்டிகள் விளையாடிய அஸ்வின், வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். சென்னையின் தொடர் தோல்விகளுக்கு அஸ்வின் பார்மில் இல்லாததும் முக்கியக் காரணமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News