Saturday, May 31, 2025

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்ட எலான் மஸ்க், அக்கட்சிக்கான மிகப்பெரிய நன்கொடையாளராகவும் இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை என்ற துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், பொறுப்பிலிருந்து விலகுவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news