Thursday, January 15, 2026

ஐபிஎல் பைனலில் முப்படை தளபதிகள் : BCCI முடிவு

ஐபிஎல் பைனலில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிகளுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, ஆப்ரேஷன் சிந்தூர் பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஜூன் 3இல் நடக்கும் ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ராணுவத்தை கெளரவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிகளையும் ஐபிஎல் பைனலுக்கு அழைத்து பிசிசிஐ கவுரவிக்க இருப்பதாகவும், ஒரு சில ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News