Thursday, January 15, 2026

பச்சோந்தி போல் நிறம் மாறும் RCB ரசிகர்கள் – என்ன காரணம்?

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும், கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியும் இந்த IPL season-னில் முதல்முறையாக நேற்றைய போட்டியில் மோதியது.. 

அது மட்டுமின்றி தோனி அடுத்த IPL-லில்  விளையாட முடியாவிட்டால் இதுவே அவரது கடைசி  IPL போட்டியாக இருக்கும்.. இதனால் இந்த போட்டியில் சென்னை ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் CSK அணி அபார வெற்றி பெற்றது..

இது பக்கம் இருக்க, CSK இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென RCB ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

ஏனென்றால்  பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள RCB அணி 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடத்தில் இருந்தால் மட்டுமே Qualifier 1 போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

Qualifier 1 போட்டியில் வெற்றிப்பெற்றால் நேரடியாக final-லுக்கு செல்லலாம். ஒருவேளை அதில் தோற்றாலும், எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் Qualifier 2 போட்டியில் மோதி, அந்தப் போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறலாம்.

அதே சமயத்தில் , 2வது இடத்திற்கு வருவதற்கு RCB அணிக்கு சில சிக்கல்கள் உள்ளது.

அதாவது RCB மே 27 ஆம் தேதி நடைபெற உள்ள LSG – விற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.மேலும் இன்று நடைபெற உள்ள போட்டியில், மும்பை அணி பஞ்சாபை வீழ்த்த வேண்டும்..

இதெல்லாம் நடந்தால் RCB அணி 2வது இடத்திற்கு செல்ல வேண்டும். எனவே, நேற்றைய போட்டியில் RCB ரசிகர்கள் நினைத்தவரே CSK அணி வெற்றி பெற்றது..இன்றைய போட்டியும் மற்றும் நாளைய போட்டியும் முடிவில் தான் தெரியவரும்  RCB ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்னவாகப் போகும் என்று..

Related News

Latest News