Sunday, May 25, 2025

”அதெல்லாம் பண்ண முடியாது” இடியை இறக்கிய பும்ரா

ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான, டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், ஜூலை மாதம் வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய A அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும். ரோஹித், கோலி ஓய்வால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் BCCIக்கு, ‘கத்தி மேல் நடப்பது போல’ மாறியுள்ளது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற BCCI மீட்டிங்கில், தன்னால் மொத்த டெஸ்ட் தொடரிலும் விளையாட முடியாது என பும்ரா கைவிரித்து விட்டாராம்.

இதுகுறித்து பும்ரா, ” 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட, எனது உடம்பு ஒத்துழைப்பு தராது என நினைக்கிறேன். எனவே, சில போட்டிகளில் ஓய்வு இருக்கும் வகையில், அட்டவணையை தயார் செய்யுங்கள்,” என்று பேசியுள்ளாராம்.

ஷமி பார்மில் இல்லாததால், பும்ராவைத் தான் BCCI பெரிதும் நம்பியிருந்தது. தற்போது அவரும் உடல்நிலையைக் காரணம் காட்டுவதால், வேறு எந்த பவுலரை மாற்று வீரராக எடுக்கலாம்? என்று, BCCI தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news