இந்திய டெஸ்ட் அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று BCCI அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் கருண் நாயர், ஷார்துல் தாகூர், மற்றும் சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளனர், ஆனால் முகம்மது ஷமி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.