10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : பாஜக பிரமுகர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமாரை போக்சோ வழக்கில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நிலையில் உறவினர்கள் ராஜ்குமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து படங்களை சமூக வலை தளத்தில் பரப்பினர்.

இந்நிலையில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் பேரில் ராஜ்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Related News

Latest News