Sunday, August 3, 2025
HTML tutorial

எங்க வந்து ‘யாருகிட்ட’ வம்பிழுக்குற? GT சிராஜை ‘சுளுக்கெடுத்த’ பூரன்

இந்த IPL தொடரில் முன்னணி பவுலர்களே தங்களின் பந்துகள், பவுண்டரிகளுக்கு பறப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். முன்னதாக டெல்லி – மும்பை இடையிலான போட்டியில் பும்ரா தன்னுடைய பந்தில், கருண் நாயர் சிக்ஸர் அடித்ததை தாங்க முடியாமல் அவரிடம் நேரடியாக மோதினார்.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான போட்டியிலும், அதுபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியின் 16 வது ஓவரில், ஸ்ட்ரைக்கில் நின்ற பூரனுக்கு தொடர்ந்து 2 பவுன்சர்களை முஹமது சிராஜ் வீசினார்.

இதில் ஒரு பந்துக்கு நடுவர் Wide வழங்கினார். இன்னொரு பந்தில் பூரனால் ரன் அடிக்க முடியவில்லை. இதைப்பார்த்த சிராஜ் Wanted ஆக சென்று பூரனிடம் வம்பிழுத்தார். ஆனால் பூரான், சிராஜைக் கண்டுகொள்ளாமல் சூயிங்கம்மை மென்றபடி, மிட்செல் மார்ஷிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார்.

இதை சிராஜால் தாங்க முடியவில்லை. மீண்டும், மீண்டும் பூரனை கிண்டல் அடித்தபடியே இருந்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்த பூரன் முடிவில், அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து சிராஜை Silent ஆக்கினார்.

அத்துடன் சிராஜை நோக்கி Flying Kiss ஒன்றையும் பறக்க விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” மனுஷன் உண்மையிலேயே சிராஜை செஞ்சு விட்டுட்டாரு” என்று சமூக வலைதளங்களில், பூரனை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

நேரலையில் இருந்த வர்ணனையாளர்களும் கூட பூரனின் இந்த செயலை பாராட்டினர். அதேநேரம் 4 ஓவர்களை முழுமையாக வீசியும் கூட, சிராஜால் விக்கெட் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News