Friday, May 23, 2025

வைபவ் சூர்யவன்ஷியை கட்டி அணைத்த ப்ரீத்தி ஜிந்தா..?வைரலாகும் ஃபோட்டோ…

2025 IPL தொடரின் இளம் வீரராக அறிமுகமானார் வைபவ் சூர்யவன்ஷி. அது மட்டுமின்றி IPL வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அறிமுகமாகி ஓவர் நைட்டில் வைரலாகிவிட்டார். 14 வயதிலேயே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், IPL வரலாற்றில் 35 பந்துகளில் சதம் அடித்து, அதிவேகமாகச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த நிலையில், மே 18 அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டி முடிந்தவுடன், PBKS அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அனைத்து வீரர்களையும் சந்தித்து கைகுலுக்கினார்.வைபவ் சூர்யவன்ஷியையும் அவர் சந்தித்தார். அப்போது அவருடன் சிறிது நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அது அதிகாரப்பூர்வமான PBKS சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகி இருந்தது.

ஆனால், அந்த வீடியோவில் எந்த இடத்திலும் ப்ரீத்தி ஜிந்தா வைபவ் சூர்யவன்ஷியை கட்டி அணைக்கவில்லை.அது போன்ற சில புகைப்படங்கள் பல்வேறு நபர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் காட்டுத்தீ போன்று பகிரப்பட்டது. அது உண்மையான புகைப்படம் என நினைத்துச் சில ஊடகங்களும் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டன. அதைப் பார்த்து ஆக்ரோஷமான ப்ரீத்தி ஜிந்தா, அது போலியான புகைப்படம் என தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இது ‘மார்ப்’ செய்யப்பட்ட புகைப்படம். மேலும், இது பொய்யான செய்தி. தற்போது செய்தி சேனல்களிலும் ‘மார்ப்’ செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாவது ஆச்சரியத்தை அளிக்கிறது,” என்று கூறி இருக்கிறார்.

Latest news