Friday, May 23, 2025

எங்க CSK பிளேயரை ‘எடுத்துக்கங்க’ BCCIக்கு பிளெமிங் ‘கோரிக்கை’

IPL தொடருக்கு மத்தியிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பணிகளை BCCI கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறது. இதற்கான இந்திய A அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு ஆடும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.

இந்தநிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், முதன்முறையாக BCCIக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில், ” அன்ஷூல் கம்போஜ் நல்ல லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசுகிறார்.

முழுக்க, முழுக்க பேட்டர்களுக்கான பிட்ச்சில் கூட, அன்ஷூலின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. இதனால் வேகத்திற்கு சாதகமான இங்கிலாந்து பிட்ச்சுகளிலும், அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். அன்ஷூலின் பந்துகள் அதிகமாக Swing ஆகாமல், குறைவாகதான் Swing ஆகிறது.

அவரது பந்துவீச்சு டெஸ்டில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை சேர்க்க வேண்டும்,” என்று அன்ஷூலுக்கு, வரிந்து கட்டிக்கொண்டு சப்போர்ட் செய்துள்ளார்.

24 வயது அன்ஷூல் கம்போஜ் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்தினார். போட்டிக்கு பிறகு அன்ஷூலின் பவுலிங்கை கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெமிங் இருவருமே பாராட்டி இருந்தனர்.

இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய A அணியிலும், அன்ஷூல் கம்போஜ் இடம்பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news