Thursday, May 22, 2025

”வாழ்க்கை ஒரு வட்டம்டா” வச்சு செய்யும் ‘CSK’ ரசிகர்கள்

IPL தொடரின் Play Off ரேஸ் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. மே 21ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி, மும்பை 4வது அணியாக Play Off இடத்தை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் இந்த 2025ம் ஆண்டு IPL தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் IPL கோப்பைக்கு போட்டி போடுகின்றன.

இதில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் இதுவரை IPL கோப்பையை வென்றதில்லை என்பதால், ரசிகர்களும் எந்த அணி கோப்பையை தூக்கப் போகிறது? என, ஒருவித பதட்டத்துடனேயே காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியை, சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.

முன்னதாக சென்னை அணி Play Off ரேஸில் இருந்து முதல் அணியாக வெளியேறியபோது, CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை இஷ்டத்திற்கு பதானி விமர்சனம் செய்தார். சென்னை இத்தனை கோப்பைகளை வென்றதற்கு தோனி தான் காரணம், பிளெமிங் கிடையாது என்றெல்லாம் பேசியிருந்தார்.

தற்போது கையில் இருந்த Play Off வாய்ப்பினை இழந்து, பரிதாபமாக IPL தொடரில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” இதுவரைக்கும் சென்னை 12 முறை Play Off போய் இருக்காங்க. கைவசம் 5 கோப்பை இருக்கு. ஆனா உங்களோட நிலைமை என்ன?

இதுக்குத்தான் ரொம்ப ஆடக்கூடாது. வாழ்க்கை ஒரு வட்டம்னு சும்மாவா சொன்னாங்க, ” என்று விதவிதமாக கலாய்த்து வருகின்றனர். முதல் 4 போட்டியை அபாரமாக ஆடிவென்ற டெல்லி கேபிடல்ஸ் மும்பையிடம் பரிதாபமாக வீழ்ந்து, Play Off ரேஸில் இருந்தே வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news