சென்னையில் இருந்து டில்லி, கொச்சி, புனே உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.