ஆறுதல் வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று டெல்லியின் அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதுகின்றன. கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றியை சுவைத்துள்ளது. ஆனால் ராஜஸ்தானோ பஞ்சாபுக்கு எதிராக, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதனால் இன்று இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கலாம். IPL தொடரின் மூத்த வீரரான 43 வயது தோனிக்கு எதிராக, 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷியை ராஜஸ்தான் களமிறக்குகிறது.
எனவே இன்றைய போட்டியில் இவர்கள் இருவரின் ஆட்டமும் மிகுந்த கவனம் பெறும் என்று தெரிகிறது. RRஐ பொறுத்தமட்டில் ஜெய்ஸ்வால், சூரியவன்ஷி, சஞ்சு சாம்சன் மூவரும் தான் அணியின் வெற்றிக்கு அதிகம் பாடுபடுகின்றனர். இவர்கள் விக்கெட்டை விரைவாக எடுத்து விட்டால், சென்னையின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம்.
இதை மனதில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு எதிராக, வேகப்பந்து வீச்சாளர் Nathan Ellisஐ தோனி பிளேயிங் லெவனில் கொண்டு வருகிறாராம். அதோடு சாம் கரணுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவும் இடம் பெறுவார் என்று தெரிகிறது.