Tuesday, May 13, 2025

CBSE தேர்வு முடிவுகள் : கடைசி இடத்திற்கு சென்ற உ.பி.

பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

இதில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் 99.60 சதவீதம் பெற்று விஜயவாடா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திருவனந்தபுரம் (99.32 %), மூன்றாவது இடத்தில் சென்னை (97.39 %) உள்ளது.

கடைசி இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் உள்ளது. அங்கு 79.53 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Latest news