பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
முன்னதாக போர் பதற்றக் காரணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்ததால் மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.