பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க 60 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பயிற்சியில் இருந்த வீரர்களும் எல்லைக்கு விரைகின்றனர்.