Saturday, May 10, 2025

போர் பதற்றத்தால் இந்தியா முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படுகிறதா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அடுத்த சில தினங்களுக்கு ஏடிஎம்கள் வேலை செய்யாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இவை அனைத்தும் பொய் என்றும் வாட்ஸ் அப்பில் வரும் எதையும் நம்ப வேண்டாம் என்றும் PIB தெரிவித்துள்ளது. ஏடிஎம்மில் வழக்கம் போல எந்தவித தட்டுப்பாடுகளும் இன்றி செயல்படும் என்றும் பொதுமக்களுக்கு PIB சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news