Monday, December 22, 2025

இந்தியாவில் கராச்சி பெயரில் பேக்கரி – போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்பு

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள வெங்கோஜிபாலம் எனும் பகுதியில் கராச்சி பேக்கரியின் கிளை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதையடுத்து தேசிய கொடியுடன் வந்த இந்து அமைப்பினர் கராச்சி பேக்கரி பெயரை மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர்.

பெயர் மாற்றப்படாவிட்டால், தேசத்துரோக வழக்குத் தொடர வேண்டும் என மத்திய அரசையும் அந்த அமைப்பினர் வலியுறுத்தினர்.

Related News

Latest News