கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு மின்கசிவு காரணமாக இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட புகை காரணமாக 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
சிகிச்சையில் இருந்த 200கும் மேற்பட்டோர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.