ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. அதிகாலை தரிசனத்திற்கு வந்திருந்தனர். அப்போது காலை 2.30 மணியளவில் பெய்த பலத்த மழையால் கோவிலின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.