Wednesday, April 30, 2025

கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு

2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க் கார்னி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் இலங்கை தமிழர்களான அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 3 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Latest news