தமிழில் வெளியான ‘பீஸ்ட்’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, விடுதியில் இருந்த நடிகர் சாக்கோ, தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணையின்போது தாம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் அதில் இருந்து விடுபட உதவ வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அனுமதிக்கப்பட்டார்.