கடந்த 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது,
இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாத்தலங்களில் 48 தலங்கள் மூடப்பட்டுள்ளது.