பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 27ம் தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 27ம் தேதிக்கு பிறகு பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படாது என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.