Friday, April 25, 2025

பஹல்காம் தாக்குதல் – பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Latest news