தற்போதைய நிதியாண்டில் மட்டும் மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளில், 25,009 போலி நிறுவனங்கள் 61,545 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளீட்டு வரிப் பயன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதில், 1,924 கோடி ரூபாய் மீட்கப்பட்டு; 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மொத்தம் 42,140 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மொத்தமாக 1.01 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உள்ளீட்டு வரிப் பயன் மோசடியில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவரை, இதில் 3,107 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும்; 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.