போதைப் பொருள் வழக்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, ஜிகர்தண்டா – 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீசார் சோதனை நடத்த இருந்தனர். இந்த விஷயம் தெரிந்த ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்துள்ளனர்.