உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் 13 வயதான சிறுமியை ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கௌசாம்பி மாவட்டத்தின் கராரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை கர்மவீர் யாதவ் என்பவருக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.