கேரளாவில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மூணாறு கேப் சாலையில் டெம்போ டிராவலர் மீது சிலர் அமர்ந்து, ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த விவகாரத்தில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.