Monday, December 22, 2025

ஹால் டிக்கெட்டை பறித்துச் சென்ற கழுகு : தேர்வு எழுதச் சென்ற பெண் ‘ஷாக்

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அரசு பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு தேர்வு எழுத பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கழுகு ஒன்று ஹால் டிக்கெட்டை பறித்துச் சென்று, அங்கிருந்த ஜன்னல் கதவு மீது அமர்ந்து கொண்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார். தேர்வு எழுதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்தக் கழுகு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால், ஹால் டிக்கெட் கீழே விழுந்தது. அந்தப் பெண் ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்றார்.

Related News

Latest News